உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
19 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மடு பிரதான வீதியில் கோர விபத்து : பெண் ப@லி, மூவர் படுகாயம்

99 பார்வைகள்

மன்னார் மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியில் இருந்து நான்கு பேர் கார் ஒன்றில் மடுத் தேவாலயம் நோக்கி பயணித்த நிலையில், மதவாச்சி வீதியூடாக மடு சந்தியை வந்தடைந்த நிலையில், மடு பிரதான வீதி ஊடாக மடுத் தேவாலயம் நோக்கி சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மடு தேவாலயத்தில் இருந்து சில கிலோ மீற்றர் தூரத்திற்கு முன்பு அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்பு, வீதியை விட்டு விலகி மரத்தில் கார் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் பெண் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காயமடைந்த மூன்று பேரையும் மேலதிக சிகிச்சைக்காக பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிரோமி லக்சிகா மாரி பெர்னாண்டோ ( வயது – 55) என்ற பெண்ணின் சடலம், பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சாரதியின் தூக்கக்கலக்கத்தில் இந்த விபத்து இடம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பாக மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காட்டின் ராஜாவை, இறுதியாக அந்த மகா வனமே தனது இதயத்தோடு தழுவிக் கொண்டது!

இலங்கையின் வரலாறு, சமயம், கலை மற்றும் மக்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய கம்பீர குறியீடாகத் திகழ்ந்த “காவன்திஸ்ஸ” (Dwirada Gaja Kavantissa) எனும் யானையின் மறைவையொட்டி, முன்னாள்…

70 0 0
இலங்கை செய்திகள்

மகா சங்கத்தினரிடம் மன்னிப்புக் கோரினார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர், தமது பதவிக் காலத்தில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில்…

66 0 0
இலங்கை செய்திகள்

நாமலின் பிரத்தியேக செயலாளர் கைது

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்க இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின்…

67 0 0
இலங்கை செய்திகள்

விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்த இலங்கைப் பணிப்பெண்!

குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் இலங்கை பணிப் பெண் ஒருவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய…

68 0 0