மாஸ்கெலியா பிராந்திய மருத்துவமனையின் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்!
மாஸ்கெலியா பிராந்திய மருத்துவமனையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் குறைபாடுகள் அனைத்தும் சரி செய்ய படும் என மத்திய மாகாண ஆளுநருர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மருத்துவமனையை பார்வையிட்ட மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷா சுரங்க பெர்னாண்டோ மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மஞ்சுள சுரவீரராச்சி ஆகியோர், மஸ்கெலியா பிராந்திய மருத்துவமனையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் பல பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வைத்திய போன்றந் அதிகாரியிடம் தெரிவித்தனர்.
மாஸ்கெலியா பிராந்திய மருத்துவமனையின் குறைபாடுகள் குறித்த கடிதம் ஒன்று, ஆளுநரிடம் வழங்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லை. 22 செவிலியர் அதிகாரிகள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். இரண்டு மருந்து கலவையாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
மருத்துவமனை ஊழியர்கள் போதுமான அளவில் இல்லை. 20 ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது ஆம்புலன்ஸ் 20 ஆண்டுகளாகப் , பழமையான வண்டியே உள்ளது அதனை சீர் செய்து கொண்டே வைத்திய சாலையில் ஆம்புலன்ஸ் சேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது மேலும் 2 ஆம்புலன்ஸ் தேவை அத்துடன் இரண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் தேவைப்படுகின்றனர்.
இரண்டு மின்சார மின்தூக்கிகள் இருந்தபோதிலும், அவை பல ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளன.இதன் காரணமாக கர்ப்பிணி பெண்கள் கடும் சுகவீனம் உள்ள நோயாளிகள் மற்றும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர் மரணம் அடைந்து விட்டால் அவரது உடலம் மூன்றுவது, இரண்டாவது மாடியில் இருந்து தரை தளத்திற்கு கொண்டு வர பாரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது
ஆகையால் இரண்டு மின் தூக்கி களுக்கு முறையாக மின் இணைப்பு தரையில் அடி பகுதியில் வழங்காமல் மேல் பகுதியில் வழங்க நடவடிக்கை எடுக்க பட வேண்டும் அத்துடன் ஒரு மின் பார தூக்கி புதிய ஒன்றை பொருந்துமாறும்.இந்த வைத்திய சாலையை கிளங்கன் ஆதார வைத்திய சாலையுடன் இணைத்து அங்கு உள்ள இட நெருக்கடியை சீர் செய்வதுடன் அனைத்து வைத்தியர்களும் அவர்களின் நேரசூசி படி மஸ்கெலியா வைத்திய சாலைக்கு வந்து செல்லும் பணியை ஆரம்பித்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
மத்திய மாகாண சுகாதார அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் மஸ்கெலியா பிராந்திய மருத்துவமனை, இப்பகுதியில் உள்ள 23 தேயிலைத் தோட்டங்கள் அடங்கிய அதன் 52 பிரிவுகளையும் 6 கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.
நான்கு நகரங்கள் அடங்களாக சுமார் இரண்டு லட்சம் மக்கள் வாழும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரதேச சபை, மேலும் வருடாந்தம் சிவனடி பாத மலைக்கு வந்து செல்லும் யாத்ரீகர்கள் பருவ காலத்தில், திடீரென நோய்வாய்ப்பட்டு அல்லது இறக்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யாத்ரீகர்கள் மஸ்கெலியா பிராந்திய மருத்துவமனைக்குகே கொண்டு வர படுகின்றனர் இப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது அடிக்கடி நிகழும் திடீர் குளவி கொட்டு சிறுத்தை தாக்குதல் பாம்பு கடி மற்றும் ஏனைய மிருக தாக்குதல்களில் காயமடைபவர்களும் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுகின்றனர்.
மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையைத் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையுடன் இணைக்க வேண்டும் என்றும், மருத்துவமனை மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பிற்காக ஒரு பாதுகாப்புச் சேவையும் தேவை என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் ஆளுநரிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சியிடமும் தெரிவித்தனர்.
மேலும் ஆளுநரிடமும் இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக திடீர் மரண விசாரணை அதிகாரி இல்லாததால் தோட்டத் தொழிலாளர் சமூகத்தினரும் நகர கிராம மற்றும் சிவனடி, பாத மலைக்கு வந்து செல்லும் உள்நாட்டு வெளிநாட்டு யாத்ரீகர்கள் மரணிக்கும் பட்சத்தில் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும், மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையை டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையுடன் இணைக்க வேண்டும் என்றும், மருத்துவமனை மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பிற்காக ஒரு பாதுகாப்பு சேவையும் தேவை என்றும் ஆளுநர் நாடாளுமன்ற உறுப்பினரிடமும் மேலும் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, மாவட்ட மருத்துவமனையின் பிரதம மருத்துவ அதிகாரி அகமது ரஷீன், மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி எம்.எச்.எம். இர்ஷாத், மஸ்கெலியா காவல்துறை கண்காணிப்பாளர் எஸ் புஷ்ப குமார மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



