உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா ஆரம்பம்

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
117 பார்வைகள்

கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா நேற்று மாலை தகவு திறத்தலுடன் ஆரம்பமானது.

இன்றைய தினம் நவராத்திரி ஆரம்பமாகியுள்ள நிலையில் 09தினங்கள் முப்பெரும்தேவிகளுக்கான தினமாக சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் பெரியகல்லாறு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் சக்தி விழாவும் ஆரம்பமாகியுள்ளது.

நேற்று மாலை பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயத்திலிருந்து அம்பாள் எழுந்தருளல் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

அம்பாள் எழுந்தருளல் செய்யப்பட்டு தேவாதிகள் ஆடிவர பெண்கள் கற்பூரச்சட்டி ஏந்திவர வடபத்திரகாளியம்மன்ஆலயம் வரையில் ஊர்வலமாக அம்பாள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து ஆலயத்தில் கதவு திறத்தல் பூஜைகள் நடைபெற்றன.

உற்சவகால பிரதமகுரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ குமாரலிங்கம் பூசகர் தலைமையிலான பூசகர்களினால் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதை தொடர்ந்து திருக்கதவு திறக்கப்பட்டு சக்தி விழா ஆரம்பமானது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அன்னையின் வாழைக்காய் எழுந்தருளல் செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் நாளை திங்கட்கிழமை அன்னையின் ஊர்காவல் உலா நடைபெறும்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை சக்தி மகா யாகம் நடைபெற்று அன்று மாலை நோற்பு கட்டும் நிகழ்வும் கடல்குளிப்பு உற்சவமும் நடைபெறும்.
புதன்கிழமை(14)காலை அன்னையின் அற்புத நிகழ்வான தீமிதிப்பு திருச்சடங்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

153 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

145 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

135 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

134 0 0