பேருந்து முற்றாக எரிந்து சேதம் : இருவர் காயமின்றித் தப்பினர்!
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று இன்று (11) அதிகாலை தீப்பற்றி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
ஹபரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜக்கா பங்குவ பகுதியை அண்மித்த 144ஆம் கட்டைப் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலைக்கு வருகைதரவிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவருவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது.
சம்பவத்தின்போது பேருந்தில் இருந்த சாரதியும் உதவியாளரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






