உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங்கினுடன் விமல் வீரவங்ச சந்திப்பு

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
118 பார்வைகள்

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங்கின் விசேட அழைப்பின் பேரில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் சீனத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்றது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் இலங்கை – சீனா இடையிலான நீண்டகால வரலாற்று ரீதியான நட்புறவு தொடர்பில் இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடினர்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் விமல் வீரவன்சவுடன் தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுபுன் அனுருத்த ஜயசிங்கவும் கலந்துகொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் பிராந்திய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

157 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

146 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

136 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

135 0 0