உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான செயற்குழுவிலிருந்து எதிர்க்கட்சிகள் விலகவில்லை : அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
107 பார்வைகள்

“மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்றச் செயற்குழுவிலிருந்து எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் விலகவில்லை. நடைமுறையில் காணப்படும் சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்குச் சகல தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியமாகும். திட்டமிட்டமைக்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.”

இவ்வாறு மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராயும் நாடாளுமன்றச் செயற்குழுவின் தலைவரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் செயற்குழுவிலிருந்து விலகுவதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் எதிர்க்கட்சிகளின் நான்கு உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். எவரும் குழுவிலிருந்து விலகவில்லை. சகல தரப்பினரது ஒத்துழைப்புடன் குழு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கலுக்குத் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். குழுவில் சகல விடயங்களும் ஆராயப்படுகின்றன. அவற்றுக்கான யோசனைகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்படுகின்றன.

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் யோசனைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதைப் போன்றே, ஆளும் தரப்பு முன்வைக்கும் யோசனைகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தலில் காணப்படும் சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின், சகல தரப்பினரது ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஏன் இந்த விடயத்தில் அவசரப்படுகின்றார்கள் என்பது தெரியவில்லை. நடைமுறையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்கு உண்மையில் தீர்வு காணும் நோக்கம் இவர்களுக்கு உள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.

குழுவின் அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குழுவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.
……………………

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

157 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

146 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

136 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

135 0 0