உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கை – இந்திய மீனவர்கள் விடயத்தில் அரசாங்கம் அறிக்கைகளை மட்டும் விடக்கூடாது.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
100 பார்வைகள்

இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது அன்று தொடக்கம் கூறப்பட்டு வருகின்ற விடயமே. அரசாங்கமானது அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு இருக்காமல் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் கடற்றொழில் அமைச்சராக இருந்தபோது இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்சித்தேன். இலங்கையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர் அயலக உறவுகள் என்றொரு தினத்தினை தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் போது இலங்கையிலிருந்தும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்தார்.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர உட்பட பல தமிழ் எம்.பிகள் தமிழ்நாட்டுக்கு சென்றார்கள். அங்கு சென்று அவர்கள் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேசாமல் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுப்பதற்கு முண்டியடித்தார்கள். மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து அவர்கள் எந்த விதமான அக்கறையும் காட்டவில்லை. நான் சென்றிருந்தால் அது குறித்து பேசி இருப்பேன்.

அநுர அரசாங்கத்தை பொறுத்தவரையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவிக்கிறார்கள். ஆனால் அவற்றை செயல்படுத்தவில்லை. வடக்கு, கிழக்கில் அநுரவின் கட்சிக்கு எட்டு எம்.பிகள் உள்ளார்கள். அவர்களே அதனை செயல்படுத்துவதற்கு பொறுப்பு கூற வேண்டும். அதைவிட தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை குழு ஆகியன வடக்கு கிழக்கை மையப்படுத்தி நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். நான் அவருக்கு ஏதும் சொல்ல விரும்பவில்லை. இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை அறிவித்துள்ளது. இது இன்று நேற்றல்ல அன்று தொடக்கம் கூறப்பட்டு வருகின்ற விடயமே. அந்த தீர்ப்பினை அந்த நாட்டு மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் கவனத்தில் எடுக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் இலங்கை அரசாங்கம் அந்த தீர்ப்பினை தூதரகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளை செய்யாமல், அரசாங்கமானது இங்கிருந்து வெறுமனே அறிக்கைகளை விடுவதால் எந்தவித பிரயோசனமும் இல்லை. கடற்றொழில் செய்தவனுக்கு அறிக்கை எதுவும் செய்யப் போவதில்லை. நடைமுறையில் அவற்றை செயற்படுத்த வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

137 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

136 0 0