புகையிரதம் மோதி பெண் ஒருவர் உ**யிரிழப்பு.!
கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரதம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக நீர்கொழும்பு பொலிஸார் வெள்ளிக்கிழமை (09) தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் நிதுலேமட, தெல்தெனியா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவராவார்.
குறித்த பெண் நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்கும்போது புகையிரதம் மோதியதிலே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


