உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெலிக்கடை சிறைக்குள் தமிழ்க் கைதிகள் கொ**லை செய்யப்பட்டமை தமிழ் மக்களின் மனதில் மாறாத வடு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
127 பார்வைகள்

தமிழர்களுக்கு எதிரான 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலைக்கான உண்மையான நீதியைக் கண்டறியும் பொறிமுறையை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் எனவும், அதற்கமைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற, 1983 கறுப்பு ஜூலை இனக்கலவரம் குறித்து விசாரிக்க ஆணைக்குழு அமைக்கக் கோரும் செல்வம் அடைக்கலநாதனின் தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கறுப்பு ஜூலை என்பது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு துக்க நாளாகும். அன்றைய தினம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களும், அவர்களின் பொருளாதாரமும் அழிக்கப்பட்டன. வெலிக்கடை சிறைக்குள் அரசின் அனுமதியுடன் 53 தமிழ்க் கைதிகள் கொலை செய்யப்பட்டமை தமிழ் மக்களின் மனதில் மாறாத வடுவாக உள்ளது.

தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் கறுப்பு ஜூலை படுகொலைக்கான நீதியை நிலைநாட்டும் பொறிமுறை எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை.

உண்மையான நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கறுப்பு ஜுலை படுகொலை தொடர்பான விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும். ஆயினும் இலங்கையில் உள்ளகப் பொறிமுறைகள் மீது நம்பிக்கை இழந்துள்ளமையால், நாங்கள் சர்வதேசப் பொறிமுறையையே எதிர்பார்த்து நிற்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

137 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

136 0 0