உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வாக்குறுதிகள் காற்றில்; மக்கள் பெரும் ஏமாற்றம்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
119 பார்வைகள்

அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை பல்வேறு பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிய தற்போதைய அரசு, தாங்கள் மக்களுடன் செய்துகொண்ட சமூக ஒப்பந்தத்தை முழுமையாக மீறிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்பதாகக் கூறிய போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை. வேலையற்ற 80 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல், ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள் வழங்குதல் போன்ற வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன.

இறக்குமதி விலையிலேயே எரிபொருள் வழங்கப்படும் என்றும், நெல் ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் நிலையான விலை வழங்கப்படும் என்றும் வாக்களித்துவிட்டு, இன்று எவற்றையும் செய்யாமல் அரசு விவசாயிகளைக் கைவிட்டுள்ளது.

பொருட்களின் விலையைக் குறைப்போம், வரிச்சுமையைக் குறைப்போம் என்று கூறிவிட்டு, இன்று பாடசாலை உபகரணங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஏற்றுமதிகள் மீது கூட பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டுள்ளது.

பராடே சட்டத்தின் ஊடாகச் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் வியாபார சொத்துகள் ஏலத்துக்கு விடப்படுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இணக்கப்பாட்டை மாற்றியமைப்பதாகக் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் அதனை ஒரு எழுத்துப்பிழை கூட மாறாமல் கடந்த அரசைப் போலவே நடைமுறைப்படுத்தி வரும் இந்த அரசு, நவ – தாராளவாதக் கொள்கைகளையே முன்னெடுத்து வருகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

137 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

136 0 0