உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு 3 புதிய பாலங்களுக்கான வாய்ப்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
62 பார்வைகள்

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுகீட்டில் மூன்று பாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று பாலங்கள் அமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில்,

உப தவிசாளரும் வட்டார உறுப்பினருமான ராஜ் அசோக் அவர்களின் வேண்டு கோளுக்கினங்க அதன் முதலாவது பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 08.09.2026 பிரவுன்லோ கங்காபிரதேசத் தில் காலை 9 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.

இப் பாலம் அமைக்கப்படுவதற்கான முயற்சிகளில் முக்கிய பங்காற்றி, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்ட மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் திரு. கந்தையா ராஜ்குமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளர்,ராஜ் அசோக், சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், பிரவுன்லோ தோட்ட முகாமையாளர், சுகாதார வைத்திய அதிகாரி,ஆலய நிர்வாகசபை தலைவர்,சமூகத் தலைவர்கள், மன்றத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்தப் பாலத்தின் நிர்மாணம் நிறைவடைந்த பின்னர், பிரவுன்லோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் போக்குவரத்து வசதி, பாதுகாப்பு மற்றும் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் தேவைகளை முன்னிறுத்தி, அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மஸ்கெலியா பிரதேச சபையின் அபிவிருத்திப் பயணத்தை மேலும் வலுப்படுத்துவோம் எனவும் இப் பாலம் அமைப்பதின் மூலம் அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் நன்மை அடைய உள்ளனர்.

கடந்த பல தசாப்தங்களாக மழை காலங்களில் மிக மிக பீதியில் அப் பாலத்தை கடக்கும் பாடசாலை மாணவர்கள் நோயாளிகள் கர்ப்பிணிகள் குழந்தைகள் இப் பாலம் அமைப்பதின் மூலம் நன்மை அடைய உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் மூலம் குறித்த பகுதிக்கு…

65 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

74 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

52 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல்…

55 0 0