உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
72 பார்வைகள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றக் கைகொடுக்குமாறு பெரியணிலாவணை ஸ்ரீ மகாவிஷ்ணு தேவாஸ்தானத்தின் பிரதம குரு சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான மனிதாபிமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக அவர் ஆற்றியுள்ள விசேட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த அனோஜன் எனும் இளைஞன், வறுமை மற்றும் குடும்பச் சுமை காரணமாகவே சவுதி அரேபியாவுக்குத் தொழில் நிமித்தம் சென்றிருந்தார். அங்கு சமூக வலைத்தளத்தில் உணர்ச்சிவசப்பட்டு வெளியிட்ட கருத்துக்காக அவருக்கு ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேல்முறையீட்டின் மூலம் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வெளியாகும் செய்திகள் அவரது குடும்பத்தையும், முழுச் சமூகத்தையும் பேரதிர்ச்சியிலும் மீளாத் துயரிலும் ஆழ்த்தியுள்ளது. உணர்ச்சிவசப்பட்டுச் செய்த தவறுக்காக ஒரு இளைஞனின் வாழ்க்கையையும், அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையும் அழிப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.முதலாவதாக, இச்சம்பவம் தொடர்பாக எனது சமூகம் மற்றும் சமயம் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்து கொள்கின்றேன். தவறு செய்த ஒருவர் அதற்காக மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், அவருக்கு மன்னிப்பு வழங்குவதே மேலான பண்பாகும்.

தன்னை நோக்கி வந்த கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் கூட மன்னித்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் இஸ்லாமிய இறுதிக்கூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பதை நாங்கள் அறிவோம். இஸ்லாம் என்பது சமாதானத்தையும் கருணையையும் வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும்.யுத்த வடுக்களிலிருந்து மீண்டு, தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் மீள்கட்டமைப்பு, சமாதானம் மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்ப நாம் முயலும் இக்காலகட்டத்தில், இவ்வாறான சம்பவங்கள் சமூக உறவுகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடக் கூடாது.

எனவே, இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமியச் சொந்தங்களும், மதத் தலைவர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் தார்மீக உணர்வோடு இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும். சவுதி அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் உரிய அழுத்தங்களை வழங்கி, பொதுமன்னிப்பின் அடிப்படையில் அந்த இளைஞனை விடுவித்து, தாய்நாட்டிற்கு அழைத்து வந்து அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என ஒரு இந்து மதக் குருவாகக் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்

—

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Journalist-මාධ්‍යවේදී
FAROOK SIHAN(SSHASSAN)
B. F .A (Hons)Diploma-in-journalism(University of Jaffna )
0779008012-(URGENT)
sihanfarook@yahoo.com, sihanfarook@gmail.com,sihanfarook@hotmail.com
0719219055,0712320725,0754548445

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் மூலம் குறித்த பகுதிக்கு…

59 0 0
இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு 3 புதிய பாலங்களுக்கான வாய்ப்பு!

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுகீட்டில் மூன்று பாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மஸ்கெலியா பிரதேச…

59 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

49 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல்…

52 0 0