பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!
பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்
தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல் ஜோக்கிம் தெரிவிக்கையில் 200 வருடம் வாழ்ந்த பெருந்தோட்ட மக்களுக்கு இதுவரை காலமாக சொந்த முகவரி இல்லாத காரணத்தினால் அவர்கள் உரிமை உள்ளவர்களாக இந்த நாட்டில் வாழ முடியாத சூழ்நிலை காரணமாக இந்த மக்கள் தொடர்ந்து தங்களின் உரிமைகளை இழக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் காணப்பட்டன மக்களுக்கு சொந்த முகவரியை வழங்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 10 தோட்டங்களுக்கு தற்போது முகவரி வழங்கும் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்
இத்திட்டம் வெற்றி அளிக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன எதிர்காலத்தில் பல தோட்டங்களில் முகவரி தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அத்தோடு இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தில் உதவி நிறைவேற்று பணிப்பாளர் எம் கருணாகரன் மற்றும் கண்காணிப்பு மீளாய்வு உத்தியோகஸ்தர் எம் சரனியா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.