உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் முருங்கன் பகுதியில் புதிய விதை விற்பனை நிலையம் ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
52 பார்வைகள்

மன்னார் – முருங்கன் பகுதியில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு, Sennel Agro (Pvt) Ltd நிறுவனத்தின் கீழ் “மாதோட்ட விதைகள்” எனும் புதிய விதை விற்பனை நிலையம் நேற்று (7) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முருங்கன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களுக்கும் பயிர்ச்செய்கை கால நிலைக்கும் ஏற்ற தரமான விதை நெல்லை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த புதிய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விதை விற்பனை நிலையத்தின் ஊடாக விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் வகைகளை நேரடியாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது டன், பிரதேச விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான ஆதரவையும் வழங்கும் நோக்கில் நிறுவனம் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதை விற்பனை நிலையம் நேற்று நடைபெற்ற வைபவ நிகழ்வொன்றின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், விவசாயத் திணைக்கள பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது டன், புதிய நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் விவசாயத்துறையை வலுப்படுத்தும் வகையில், விவசாயிகளுக்கு தேவையான விதைகளை அருகாமையில் பெற்றுக்கொள்ள இந்த புதிய நிலையம் ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் மூலம் குறித்த பகுதிக்கு…

59 0 0
இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு 3 புதிய பாலங்களுக்கான வாய்ப்பு!

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுகீட்டில் மூன்று பாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மஸ்கெலியா பிரதேச…

59 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

49 0 0