உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
75 பார்வைகள்

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

வணக்கத்திற்குரிய ஞானசார தேரர் கைது செய்யப்பட்டது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலப்பாட்டை தெளிவுபடுத்திய அவர், ஊடகங்களுக்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

“இலங்கை என்பது சிங்கள பௌத்த மரபுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடாகும். நாட்டின் ஒவ்வொரு பௌத்த கிராமத்திலும் ஒரு விகாரை அமைந்துள்ளது.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை தற்போதைய அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில் கூட, விகாரையையும் மகா சங்கத்தினரையும் முதன்மைப்படுத்திய ஒரே சுபமுகூர்த்த நேரத்திலேயே ஒட்டுமொத்த சமூகமும் இயங்குகிறது.

எனவே, இந்த புனிதமான காவி ஆடைக்குத் தீ வைக்க முற்பட வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரிக்கிறோம். நீங்கள் மோதத் துணிவது நாட்டின் நீண்டகால வரலாறு, செழிப்பு மற்றும் நாகரிகத்துடன் ஆகும்.
அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியாளர்களால் கூட இந்த புனித காவி ஆடையில் கைவைக்க முடியாமல் போனது.

ஆங்கிலேயர்களும் ஆரம்பத்தில் மகா சங்கத்தினருடன் மோத முயற்சித்துப் பார்த்துவிட்டு, இறுதியில் அவர்களுடன் மோதி பயனில்லை என்ற தீர்மானத்திற்கு வந்தனர்.

வரலாற்றில் இதற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. எனவே, அரசாங்கத்திற்கு நாங்கள் கூறுவது என்னவென்றால், காலம் கடந்துவிடவில்லை; உடனடியாக இந்த காவி ஆடைக்குத் தீ வைக்கும் செயலை நிறுத்துங்கள்.

நீங்கள் காவி ஆடைக்குத் தீ வைக்க முற்பட்டால், அதனால் எழக்கூடிய மக்கள் சக்தியை எதிர்த்து நிற்க இந்த அரசாங்கத்தினால் மட்டுமல்ல, உலகில் வேறு எவராலும் முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது ‘சங்க, வேத, குரு, கொவி, கம்கரு’ (துறவிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்) ஆகிய ஐந்து பெரும் சக்திகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இயக்கமாகும்.

வரலாற்றுக் காலம் தொட்டே மகா சங்கத்தினரே எங்கள் பிரதான அடித்தளமாக இருந்துள்ளனர்.
மற்றைய கட்சிகள் மகா சங்கத்தினரை மதித்தனவா இல்லையா என்பது பற்றி நாங்கள் விவாதிக்க விரும்பவில்லை.

ஆனால், வரலாற்றுப் பூர்வமாக நாட்டை ஆட்சி செய்த மன்னர்களும் தலைவர்களும் மகா சங்கத்தினரின் வழிகாட்டலையும் ஆலோசனைகளையும் பெற்றே ஆட்சி நடத்தினர்.

தற்போதைய சம்பவங்கள் குறித்து மகாநாயக்க தேரர்களும் தமது பலத்திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.”
என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

59 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

77 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

67 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

61 0 0