உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
56 பார்வைகள்

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

இன்றைய தினம் (2026.10.08) பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஞானசார தேரர் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பௌத்த மதத்தின் பாதுகாப்புக்காகவே தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாகவும், தனது சுயநலத்திற்காகவோ அல்லது தனிப்பட்ட நன்மைகளுக்காகவோ அவர் பேசவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் குறித்து அவர் முன்கூட்டியே எச்சரித்திருந்ததாகவும், அரசியலமைப்பின் 09வது பிரிவின்படி பௌத்த மதத்தைப் பாதுகாத்து போஷிப்பது அரசாங்கத்தின் கடமை என்பதால், இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் விவகாரத்தில் ஒருவிதமாகவும், ஞானசார தேரரின் ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரத்தில் வேறுவிதமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இரட்டைத் தரநிலை பின்பற்றப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், ஒரே மாதிரியான விடயங்களில் இவ்வாறு பாகுபாடு காட்டுவது குறித்து நீதி அமைச்சு நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அதேவேளை, முன்னாள் முதன்மைப் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தெளிவான அரசியல் பின்னணி காணப்படுவதாகச் சாடிய சாகர காரியவசம், நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையையோ அல்லது நீதித்துறை செயல்பாடுகளையோ தங்கள் கட்சி கேள்விக்குட்படுத்தவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

‘சிரிலிய சவிய’ அமைப்பானது 2006ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பு எனக் குறிப்பிட்ட அவர், கொழும்பு ரிட்ஜ்வே ஆரியா சிறுவர் வைத்தியசாலைக்கு ‘CT Scan’ இயந்திரம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்காகவே அந்த அமைப்பினால் நிதிகள் திரட்டப்பட்டதாகக் கூறினார்.

பின்னர் சீன அரசாங்கத்தினால் ‘MRI Scan’ இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்ட போதிலும், ‘CT Scan’ இயந்திரத்தின் தேவை தொடர்ந்ததால் அந்த நிதி கணக்கில் வைக்கப்பட்டிருந்ததாகவும், 2015இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் முடக்கப்பட்ட அந்தக் கணக்கிலுள்ள நிதி இன்னமும் அப்படியேதான் உள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார்.

ஷிரந்தி ராஜபக்ஷ விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருந்தபோதிலும், அவருக்கு முறையான அறிவித்தல் எதுவுமின்றி அதிகாலையில் அவரது வீட்டிற்குச் சென்று இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது அரசாங்கத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடும் ஒரே சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திகழ்வதால், தமது கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் கட்சியின் தலைவரின் மனைவி ஆகியோரை இலக்கு வைத்து அரசியல் நோக்கங்களுக்காகவே இவ்வாறான பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.

சட்டப்பூர்வமான விசாரணைக்கு முகம்கொடுக்கத் தங்கள் தலைவர்கள் தயாராகவே உள்ள போதிலும், விசாரணைகளுக்கு முன்பாகவே அவர்களை விளக்கமறியலில் வைக்கும் அரசியல் சூழ்ச்சியே இங்கு நடைபெறுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

49 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த சமூகத்தின் மீது மறைமுகத் தாக்குதல்.!

சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அரசு மேற்கொண்டுவரும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் அனைவரும் அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள்…

52 0 0
இலங்கை செய்திகள்

மனைவியைப் பார்வையிட சிறைக்கு ஓடிய மஹிந்த.!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி…

54 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில்…

52 0 0