பெண்கள் இருவர் கொ**லை.!
காலி, ஹபரக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்தில் இருந்து சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்களாக கண்டெடுக்கப்பட்டவர்கள் 82 மற்றும் 87 வயதுடைய திருமணமாகாத ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் எனவும், சகோதரிகள் எனவும் ஹபராதுவைப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வீட்டின் பின்புறம் அமைந்துள்ள இரு தனித்தனி இடங்களில் இருந்து அவர்களது சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
இந்த இரட்டை கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், கொலையாளிகளும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
கொலையாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக ஹபராதுவைக் பொலிஸாரும் காலி கோட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.