உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ராகுல் காந்தி மீண்டும் கைது!

இந்திய செய்திகள் 1 மணி நேரம் முன்
69 பார்வைகள்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் நாளாக இன்று (07) போராட்டம் நடத்திய நிலையில், ஜந்தர் மந்தர் அருகே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தது. இந்தச் சம்பவத்தின் போது தங்களை பொலிஸார் தாக்கியதாக போராட்டத்தில் ஈடுபட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்,

ஆணையத்தின் மற்ற இரண்டு ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தனிச்சையாக முடிவுகளை எடுத்ததாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டதாக ஆணையத்தின் மற்ற இரண்டு ஆணையர்கள் புகார் எழுப்பி கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, மாணவர்கள் அமைப்பு உள்ளிட்டவை டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்தியா கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர் பேரணிகளை அறிவித்து நேற்று (06) முதல் ஞானேஷ் குமாருக்கு எதிரான பேரணியையும், போராட்டத்தையும் தொடங்கின. நேற்று பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைச் சந்திக்க திட்டமிட்டு, இந்தியா கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் காலை 10.30 மணிக்கு பேரணி தொடங்கினர்.

அப்படி தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற இந்தியா கூட்டணி எம்.பிக்களை ஆகாஷ்வானி வளாகத்தின் அருகேயே காவல்துறை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மீண்டும் பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியில் ஜந்தர் மந்தர் நோக்கி சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரணியைத் தொடங்கி மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்தியா கூட்டணி எம்.பிக்களை ஜந்தர் மந்தர் செல்வதற்கு முன்னதாக தடுத்து நிறுத்திய பொலிஸார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்தது. இந்தச் சம்பவத்தின் போது பொலிஸார் தங்களை தாக்கியதாக இந்தியா கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது- மு. க ஸ்டாலின் விமர்சனம்

தவெக ஆட்சியில் அரிவாள் வெட்டு தலைதூக்கியுள்ளதாக சட்டம் ஒழுங்கு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக…

88 0 0
இந்திய செய்திகள்

2047 ஆம் ஆண்டுக்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ : பிரதமர் மோடி நம்பிக்கை

அரசுத் தலைவராகத் தனது 25 ஆண்டுகாலப் பணிக்காலத்தை இன்று (07) நினைவுகூர்ந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2047 ஆம் ஆண்டுக்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை’ (விக்சித் பாரத்)…

55 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவின் புதிய ஆளில்லா விமானம் “அக்னி கலஷ்” அறிமுகம்

இந்தியாவின் புதிய போர் ட்ரோன் அக்னி கலஷ் அறிமுகம் செய்யப்பட்டது. ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, PanIIT Andhra Pradesh Summit 2026 மாநாட்டில், இந்தியாவின்…

71 0 0
இந்திய செய்திகள்

இலங்கையின் எல்லைக்குள் நுழைய வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை!

கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிப்பதற்காக இலங்கை எல்லைக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு தமிழக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (06) வாய்மொழியாகக் குறிப்பிட்டது.…

65 0 0