உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
68 பார்வைகள்

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை தயாரிக்க உதவி ஒத்தாசை புரிந்த நபரொருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீனுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவராவார்.

2026 பெப்ரவரி 13 ஆம் திகதி தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரேகொட பகுதியில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு முன்பாக இந்த இரட்டை மனிதப் படுகொலை நடத்தப்பட்டிருந்ததுடன், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இது தொடர்பாக பரந்த அளவிலான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2026 ஒக்டோபர் 07 ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகளால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக கைவிரல் அடையாளங்களை வைத்துள்ள இவர், போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரட்டைப் படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய வலையமைப்பிற்கு எதிராக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உ**யிரிழப்பு.!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில்…

33 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

57 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

58 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

73 0 0