உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
54 பார்வைகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தின் முக்கிய குளங்களில் ஒன்றான கட்டுக்கரை குளத்தின் கீழ் காலபோக பயிர்ச்செய்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டமாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, மொத்தம் 31,339 ஏக்கர் நிலத்தில் காலபோகம் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது. கட்டுக்கரை குளத்தின் கீழான பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கான முதல் நீர் விநியோகத் திகதியாக 23.10.2026 தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

விதைப்பு இறுதித் திகதி புழுதி விதைப்பு, 4 மாதங்களைக் கொண்ட நெல் விதைப்போர் 15.10.2026க்குள் தங்களுடைய நெல் விதைப்பினை பூர்த்தி செய்ய வேண்டும்.

3 அல்லது 3½ மாதங்கள் நெல் விதைப்போர் 12.11.2026-க்கு முன்பு தங்களுடைய நெல்லினை விதைப்பு செய்திருத்தல் வேண்டும். 2½ மாத நெல்லை விதைப்போரும் 12.11.2026க்கு முன்பதாக தங்களுடைய நெல்களை விதைப்பு செய்திருக்க வேண்டும்.

அதற்குப் பின்னர் நெல் விதைப்பு செய்வோர் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போது ஆன பாதிப்புகளை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆக மாட்டார்கள். விதைப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியை விவசாயிகள் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நிலப்பரப்பை தவிர்த்து, மேலதிக இடங்களில் சட்டவிரோதமாக பயிர் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே 18 விவசாயிகளுக்கு எதிராக நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உரிய காலப்பகுதியில் பயிர்ச் செய்கையை முன்னெடுத்து ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர், நீர்ப்பாசனத் திணைக்களம், பணிப்பாளர் கமநல அபிவிருத்தி திணைக்களம் உதவி பணிப்பாளர், நெல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

64 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

80 0 0