உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சவுதியில் இரண்டு விமான நிலையங்கள் மீது தாக்குதல்: மூவர் ப@லி!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
53 பார்வைகள்

சவுதி அரேபியாவின் அப்ஹா (Abha) மற்றும் கிங் காலித் (King Khalid) சர்வதேச விமான நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 36 பேர் காயமடைந்துள்ளதாக சவுதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதில் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேபோன்று, ரியாத் நகரில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விமான நிலைய வசதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய தரப்பினருடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஓமான் மற்றும் ஈரானுக்கு இடையே முக்கிய உடன்பாடு

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்கான பாதைகளை அமைப்பது தொடர்பாக ஓமான் மற்றும் ஈரானுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

78 0 0
உலக செய்திகள்

கருங்கடலில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் : 23 இந்தியர்கள் மீட்பு

23 இந்தியக் கப்பல் பணியாளர்களைக் கொண்ட, லைபீரியக் கொடியை ஏந்திய எண்ணெய்க் கப்பல் ஒன்று, ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரைப் பகுதியில் ட்ரோன் படகுகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக மொஸ்கோ…

90 0 0
உலக செய்திகள்

ஈரான் தனது அணுச்செறிவூட்டல் திறனைக் குறைக்க வேண்டும்!

அமெரிக்காவின் கோரிக்கைகளை பூர்த்தி செய்து, இரு நாடுகளுக்குமிடையிலான ஏழு மாத போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாயின், ஈரான் தனது அணுச்செறிவூட்டல் திறனில் குறிப்பிடத்தக்க குறைப்பைச் செய்ய வேண்டும்…

87 0 0
உலக செய்திகள்

சர்வதேச பருந்துக் கண்காட்சியும், ஏலமும் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது

சவூதி அரேபியாவின் கலாச்சார மற்றும் பாரம்பரிய உரிமையான பருந்து (Falconry) பயிற்சி மற்றும் அது சார்ந்த தொழில்துறையை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச பருந்து கண்காட்சி மற்றும்…

81 0 0