உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
49 பார்வைகள்

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில் ஈடுபட்டு வருகின்றது என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“புத்தசாசனத்தைப் பாதுகாப்பது போன்று ஏனைய மதங்கள், இனங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு உரிய இடமும் பலமும் வழங்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு.

சிறைச்சாலைத் திணைக்களத்தின் 550 ஆவது ஒழுங்குவிதி மற்றும் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 216 ஆவது பிரிவின்படி, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் கைதிகளின் துறவற ஆடையை அகற்ற முடியாது. இது நாட்டுக்குத் தவறான முன்மாதிரியை வழங்கும். துறவற ஆடையை அகற்றுவதா, இல்லையா என்பதை மதத் தலைவர்களே தீர்மானிப்பார்கள்.

ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என்று வாக்களித்த அரசு, தற்போது குரங்குகளைக் கணக்கெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

உற்பத்திச் செலவை முறையற்ற விதமாகக் கணக்கிட்டு, விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு 120 ரூபா மட்டுமே வழங்கி, அவர்களை அரசு நட்டத்துக்குள்ளாக்கியுள்ளது.

நாட்டில் மேலதிக அரிசி கையிருப்பு உள்ளபோதிலும், அரசு தொடர்ச்சியாக அரிசியை இறக்குமதி செய்து விவசாயிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

நாட்டில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரச வைத்தியசாலைகளில் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதனால் நோயாளர்கள் வெளியில் சென்று மருந்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

44 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

67 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

75 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

33 0 0