உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது- மு. க ஸ்டாலின் விமர்சனம்

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
149 பார்வைகள்


தவெக ஆட்சியில் அரிவாள் வெட்டு தலைதூக்கியுள்ளதாக சட்டம் ஒழுங்கு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட குற்றச் சம்பவங்களை பட்டியலிட்டு கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவு..,
த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு

சட்டம் ஒழுங்கு சீரழிந்து இரத்தச் சகதியில் சிக்கியுள்ள தமிழ்நாடு

குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதற்குச் சான்றாக கடந்த 24 மணி நேரத்தில் வெளியாகிய அதிர்ச்சிச் செய்திகள் அமைந்துள்ளன.

சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருத்தணியில் தனது 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த தந்தை அவரது வீட்டின் முன்பே வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது.

சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகள் அவரது நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பும்போதே வீரபத்திரன் என்பவர் மர்ம நபர்களால் மனைவி முன்பு வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மது போதையில் நிர்வாணமாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எண்ணூர் இரயில் நிலையத்திலேயே மாணவர்களை வெட்ட முயற்சி நடந்துள்ளது.

வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பட்டப்பகல், நள்ளிரவு எனப் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு இரத்தத்தில் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் மக்கள் பரிதவித்துக் கிடக்கின்றனர்.

காவல்துறையினரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா?

சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா?

காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது?

குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா? கண்காணிப்பு இல்லாமல் போனதைத்தானே திண்டுக்கல் மாவட்டக் கொலைச் சம்பவம் காட்டுகிறது?

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது. அதற்கான விலையாக அப்பாவி மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன.

காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்கும் காலம் எல்லாம் கடந்துவிட்டது. ‘Take – Action’ #ShootingMode-இல் இருந்து விடுபட்டு, Please Take Action CM Sir! என்று பதிவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

ஐந்து நாட்கள் கடந்தும் தொடரும் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகளின் உண்ணாவிரத போராட்டம்!

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்து அகதிகள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐவர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் தம்மை எந்த…

153 0 0
இந்திய செய்திகள்

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் : மு.க.ஸ்டாலின் பதிவு

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நீதிக்கட்சி பிறந்தது…

161 0 0
இந்திய செய்திகள்

மறைந்த எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (19) இரவு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

149 0 0
இந்திய செய்திகள்

‘ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ – வி.எஸ். பாபு மறைவுக்கு விஜய் உருக்கம்!

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது…

167 0 0