உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
217 பார்வைகள்

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.

2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில், காத்தான்குடி திசையிலிருந்து களுவாஞ்சிக்குடி திசையை நோக்கிப் பயணித்த CBY 1513 இலக்கக் காரும்,
எதிர்த்திசையிலிருந்து வந்த BBX 2573 இலக்க மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கடற்கரை வீதி, கிரான்குளம் எனும் முகவரியைச் சேர்ந்த 41 வயதான சர்வேஸ்வரன் கஜேந்தினி என்பவர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்விபத்தானது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் (பெண்) கவனயீனமே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்துத் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் வீதிப் போக்குவரத்துப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு, காரின் சாரதியான கிரான்குளம் 07, கிரான்குளம் முகவரியைச் சேர்ந்த 47 வயதான சத்திய சாயி மருத்துவமனையின் வைத்தியரான சுந்தரலிங்கம் பிரதீபன் என்பவரை அன்றைய தினமே கைது செய்தனர்.

பின்னர் 2026.07.13 ஆந் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் BTC/MC/MT/ 3109/26 இலக்கத்தின் கீழ் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், இந்த வழக்கு மீண்டும் 2026.09.15 ஆந் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிடப்பட்டது.

காயமடைந்த குறித்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் 2026.07.21 ஆந் திகதி வைத்தியசாலையிலிருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு வீட்டில் இருந்த வேளையில், இப்பெண்ணுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2026.08.07 ஆந் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இப்பெண் 2026.08.11 ஆந் திகதி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இவர் 05 நாட்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றிருந்தமையால், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உறவினர்களால் சடலம் பொறுப்பேற்கப்பட்டு 2026.08.12 ஆந் திகதி தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவரின் மரணச் சான்றிதழை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதன்போது, விபத்து இடம்பெற்று ஒரு மாதத்தின் பின்னர் மரணம் நிகழ்ந்தமை சந்தேகத்திற்குரியது எனவும், இந்த மரணமானது குறித்த வீதி விபத்தின் விளைவாக ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய பிரேத பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளுமாறும் கௌரவ நீதவான் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிபதியின் உத்தரவிற்கமைய குறித்த பெண்ணின் சடலம் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.தர்சினி முன்னிலையில் பொலிசாரினால் தோண்டி எடுக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

138 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

137 0 0