உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
134 பார்வைகள்

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னியார் வீதியிலுள்ள வீடு ஒன்றில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த இருதயநாதர் அம்றிதன் (வயது 19) என்ற மாணவன் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மாணவன் நள்ளிரவு வரை பாண்டிருப்புப் பகுதியைச் சேர்ந்த தனது காதலியான சக பாடசாலை மாணவியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

அதன் பின்னர், தனது பணப்பையில் இருந்த காதலியின் புகைப்படத்தை அறையில் காட்சிப்படுத்திய மாணவன், தனது கையை வெட்டியுள்ளார்.

இதன்போது ஏற்பட்ட அதிக இரத்தப்போக்குடன், தனது தாயாரின் சேலையின் உதவியால் வீட்டின் வெளியில் உள்ள மேல் தளத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.

அத்துடன், தூக்கில் தொங்கும்போது ஏற்படும் சத்தம் வெளியில் கேட்காமல் இருப்பதற்காகத் துணியொன்றையும் தனது வாயில் திணித்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவன் நான்கு மாதங்களுக்கு முன்னரே தனது தந்தையை இழந்துள்ளார்.

இவரது தந்தையும் தாயாரும் அரச உத்தியோகத்தர்கள் என்பதுடன், இவருக்கு இரு சகோதரர்களும் உள்ளனர்.

தந்தை மறைந்த சோகத்தில் இருந்து மீளுமுன் இச்சம்பவம் இடம்பெற்றமை குடும்பத்தினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் எஸ்.எம். றிபாஸ்டீன் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது தூக்கில் தொங்கியதால் கழுத்தில் ஏற்பட்ட இறுக்கம் காரணமாக மூச்சுக்குழாய் தடைப்பட்டு மரணம் சம்பவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனைத் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

138 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

137 0 0