உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

முல்லையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்! : உடனடித் தீர்வு தேவை என ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
67 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காட்டுயானைகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், காட்டுயானைகளின் இத்தகைய அத்துமீறல்களுக்கு வன சீவராசிகள் திணைக்களம் ஊடாக உடனடித் தீர்வை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் 07.10.2026இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு, கேப்பாப்பிலவு – புலக்குடியிருப்பு பகுதி, புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் தற்போது யானைகளால் வீடுகள், விளைநிலங்கள், விவசாய உற்பத்திப் பொருள்கள், தென்னைகள் என மக்களின் வாழ்விடமும் வாழ்வாதார மூலமும் அழிக்கப்படுகின்றன.

இவ்வாறு தொடரும் அழிவுகளுக்கு உடன் தீர்வு வழங்கவேண்டும். அடுத்த ஆண்டின் ஒதுக்கீட்டில் யானை வேலி இடப்படும் வரை மக்களின் வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்கும் யார் பொறுப்பாவது? ஆண்டுக்கணக்கில் வளர்த்தெடுத்த வான்பயிர்கள் ஓர் இரவில் சாய்க்கப்படுகின்றன.

இவ்வாறான அத்துமீறிய யானை – மனித மோதலுக்கு பிரதேச மட்டத்தில் வன சீவராசிகள் திணைக்களம் ஊடாக உடனடியாக தற்காலிக தீர்வையேனும் வழங்க இவ்வரசு வகை செய்தல் வேண்டும் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு விளக்கமறியல் உத்தரவு

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை வழக்கு விசாரணை…

70 0 0
இலங்கை செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு இன்று (07) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி…

69 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி. வடக்கில் போராட்டம்!

யாழ். மாவட்டத்தில் 04 புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வலி வடக்கு பிரதேச சபை எல்லைக்குள்ளும் ஒரு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிய…

41 0 0
இலங்கை செய்திகள்

தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் அதிகரித்து செல்கிறது.

பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தோட்டங்களின் குத்தகையிலிருந்து தோட்ட குடியிருப்பு பிரதேசங்கள் விடுவிக்கப்படாவிட்டால் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என முன்னாள் மத்திய மாகாண சபை…

69 0 0