உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் அதிகரித்து செல்கிறது.

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
69 பார்வைகள்

பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தோட்டங்களின் குத்தகையிலிருந்து தோட்ட குடியிருப்பு பிரதேசங்கள் விடுவிக்கப்படாவிட்டால் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“நுவரெலியா லவ்வர்ஸ்லீப் தோட்டத்தில் நடைபெற்றது போன்ற விடயங்கள் மலையகத்தில் தொடர்ச்சியாகவும் பரவலாகவும் நடந்து கொண்டே இருக்கின்றன. தோட்ட முகாமையாளர்களுக்கு தோட்ட குடியிருப்பு பிரதேசத்தில் அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் செய்து கொடுத்துள்ள சட்ட ஏற்பாடுகளே இதற்குக் காரணமாகும்.

காலத்தின் தேவைக்கேற்ப பல சட்டங்கள் திருத்தப்படுகின்றன. அதேபோல அரச காணி சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து தோட்ட குடியிருப்பாளர்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்த முடியும். அதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

தற்போது தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் பெருந்தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்படாத பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பெருந்தோட்ட கம்பெனிகள் கையில் எடுக்கும் போது தோட்டங்களில் கலவரங்கள் ஏற்படுகின்றன.

பெருந்தோட்ட மக்களின் வரலாற்றையும் அவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக செய்த பங்களிப்பையும் இந்த நாட்டை ஆண்ட எந்த ஒரு அரசாங்கமும் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை.

பெருந்தோட்ட மக்களுக்காக பரிதாபப்படுவதாக காட்டிக் கொள்வதை தவிர இவர்கள் அந்த மக்களின் பிரச்சினைகளை சரியாக கையாள தவறிவிட்டார்கள். தோட்டங்களுக்கு முகாமையாளராக வருபவர்கள் வாழ்க்கை சுமையை அனுபவித்த குடும்பப் பின்னணி கொண்டவர்களோ அல்லது வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கிய குடும்பங்களின் வாரிசுகளோ அல்ல. செல்வந்த குடும்பங்களை சேர்ந்த அந்தஸ்தையும் ஆடம்பரத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட மேட்டுக்குடியினர் தெரிவு செய்யும் தொழிலாக தோட்ட முகாமையாளர் தொழில் காணப்படுகிறது.

இவர்கள் தோட்ட தொழிலாளர்களை அடிமைகள் போல் அடக்கி ஆளலாம் என்ற மனநிலையுடனையே தொழிலை தொடங்குகின்றனர். இவ்வாறானவர்களிடம் மனிதாபிமானத்தையோ மக்கள் நலன் சார்ந்த விடயங்களையோ எதிர்பார்க்க முடியாது.

பெருந்தோட்ட கம்பனிகளை பெருந்தோட்ட பயிர்ச்செய்கை பிரதேசத்துடன் மட்டுப்படுத்திவிட்டு தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை குத்தகை ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதே பொருத்தமான நடவடிக்கையாகும்.

தற்போதைய ஜனாதிபதியே தனது தேர்தல் பரப்புரையின் போது 200 வருடங்களாக உழைத்தவர்களுக்கு ஒரு துண்டு காணி கொடுத்தால் என்ன? என்று கேள்வி எழுப்பினார் இன்று அவரே ஜனாதிபதியாக இருக்கின்ற போது இருக்கின்ற இடத்தை விட்டு துரத்தி அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக பிரதிநிதிகள் இந்த விடயத்தை ஏன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடாது?

பெருந்தோட்ட கம்பெனிகளுடனான குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பிக்க முனைப்பு காட்டுகின்ற அரசாங்கம் மலையக மக்கள் மீது அக்கறை காட்டுவது உண்மையாக இருந்தால் தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை தவிர்த்து விட்டு புதிய குத்தகை ஒப்பந்தம் குறித்து சிந்திக்க வேண்டும். எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு விளக்கமறியல் உத்தரவு

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை வழக்கு விசாரணை…

70 0 0
இலங்கை செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு இன்று (07) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி…

69 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி. வடக்கில் போராட்டம்!

யாழ். மாவட்டத்தில் 04 புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வலி வடக்கு பிரதேச சபை எல்லைக்குள்ளும் ஒரு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிய…

41 0 0
இலங்கை செய்திகள்

முல்லையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்! : உடனடித் தீர்வு தேவை என ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காட்டுயானைகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், காட்டுயானைகளின் இத்தகைய…

67 0 0