உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜனின் பாதுகாப்புக்கு உடன் உத்தரவாதம் அளியுங்கள் : சபையில் சாணக்கியன் வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
66 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்குச் சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து அரசு உடனடியாக விரைந்து செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற அமர்வின்போது, நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“சவூதி சிறையில் அனோஜனுக்குக் கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டுத் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குடும்பத்தார் குறிப்பிடும் நிலையில், நகக் கீறல்களுடனான காயங்களே ஏற்பட்டதாகச் சிறைச்சாலைத் தரப்பு கூறியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அவரது பாதுகாப்பு மற்றும் தற்போதைய நிலை குறித்து அரசு உறுதியளிக்க வேண்டும்.

சவூதி அரசுத் தரப்பு கடுமையான தண்டனையைக் கோரி மேன்முறையீடு செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், முதன்மைத் தீர்ப்பு, மேன்முறையீட்டு ஆவணங்கள் மற்றும் சட்டக் கட்டணங்களின் முழுமையான விவரங்களைச் சபையில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அனோஜனின் மேன்முறையீட்டுக்கு அனுமதி அளித்தது யார் என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட வேண்டும்.

சவூதிக்குச் சென்ற சட்டப் பிரதிநிதிகள் குழுவின் விஜயம் மற்றும் பிரதி சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் பயணம் தொடர்பில் சவூதி தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதா என்பதையும், அனோஜன் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாரா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் எவரும் அரசியல் நோக்கத்துடன் செயற்படவில்லை. அனோஜனை எவ்வாறாவது பாதுகாத்து நாட்டுக்கு அழைத்து வர வேண்டும். அரசு எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி. வடக்கில் போராட்டம்!

யாழ். மாவட்டத்தில் 04 புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வலி வடக்கு பிரதேச சபை எல்லைக்குள்ளும் ஒரு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிய…

38 0 0
இலங்கை செய்திகள்

முல்லையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்! : உடனடித் தீர்வு தேவை என ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காட்டுயானைகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், காட்டுயானைகளின் இத்தகைய…

64 0 0
இலங்கை செய்திகள்

தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் அதிகரித்து செல்கிறது.

பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தோட்டங்களின் குத்தகையிலிருந்து தோட்ட குடியிருப்பு பிரதேசங்கள் விடுவிக்கப்படாவிட்டால் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என முன்னாள் மத்திய மாகாண சபை…

65 0 0
இலங்கை செய்திகள்

கந்தப்பளை மாணிக்க விநாயகர் ஆலய மண்டபத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

கந்தபளை மாணிக்க விநாயகர் ஆலய மண்டபத்தில் இன்று (07) பொதுமக்களின் நலன் கருதி இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டது. நுவரெலியா பிரதேச சபை மற்றும்…

39 0 0