உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
82 பார்வைகள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பும் கலந்துரையாடலொன்றும் இன்று (07) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக குறித்த பிரதேச மக்கள் முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இங்கு சமூகமளித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விவரங்கள் கேட்டறியப்பட்டன. குறிப்பாக, தற்போதைய பொருளாதார நிலைமையினால் மக்களின் வருமான மட்டம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகக் குடும்பங்களின் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டன.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் காணப்படும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிக் குறைப்பாடுகள் மற்றும் சுகாதாரம், கல்வித் துறைகளில் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டன.

குறிப்பாக, தரமான சுகாதார சேவைகளுக்கான அணுகல், பாடசாலைக் கல்வியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளின் போசாக்கு நிலைமை குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இது தவிர, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தின் போது எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது காணப்படும் வரிச் சுமை தளர்த்தப்பட்டு, மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் ஒரு வரவு செலவுத் திட்டத்தை தாம் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ.இராதாகிருஷ்ணன், டாக்டர் இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா, கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, எம். எஸ். உதுமா லெப்பே, பத்மநாதன் சத்தியலிங்கம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முல்லையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்! : உடனடித் தீர்வு தேவை என ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காட்டுயானைகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், காட்டுயானைகளின் இத்தகைய…

59 0 0
இலங்கை செய்திகள்

தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் அதிகரித்து செல்கிறது.

பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தோட்டங்களின் குத்தகையிலிருந்து தோட்ட குடியிருப்பு பிரதேசங்கள் விடுவிக்கப்படாவிட்டால் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என முன்னாள் மத்திய மாகாண சபை…

61 0 0
இலங்கை செய்திகள்

கந்தப்பளை மாணிக்க விநாயகர் ஆலய மண்டபத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

கந்தபளை மாணிக்க விநாயகர் ஆலய மண்டபத்தில் இன்று (07) பொதுமக்களின் நலன் கருதி இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டது. நுவரெலியா பிரதேச சபை மற்றும்…

37 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசாங்கத்தின் பௌத்த விரோத போக்கிற்கு எதிராக இரு வழக்குகள் தாக்கல் செய்யப்படும்.!

2,300 வருட கால ஹெல சாசன வரலாற்றில் மிகவும் இருண்ட நாளாக 2026 ஒக்டோபர் 06 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக தூய்மையான ஹெல உறுமய (பிவிதுரு ஹெல…

66 0 0