உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
64 பார்வைகள்

அரசால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு’ கடந்த கால மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்த பல்வேறு கூறுகளைத் தன்னுள் கொண்டுள்ளது என்று தெரிவித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் புதிய சட்டமூலம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இந்தப் புதிய சட்ட வரைவில் பயங்கரவாதம் குறித்த பரந்துபட்ட வரைவிலக்கணம், போதிய நீதித்துறை மேற்பார்வையின்மை, தேடுதல் மற்றும் கைதுகள் தொடர்பில் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள மட்டுமீறிய அதிகாரங்கள், கருத்து வெளிப்பாடு மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நிர்வாக அதிகாரங்கள் ஆகியவை உள்வாங்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவை ஐ.நா. மனித உரிமைகள் நியமங்களுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிபந்தனைகளுக்கும் முரணானவை ஆகும்.

2024 ஆம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு வாக்குறுதியளித்திருந்த போதிலும், அதனைப் பதிலீடு செய்யும் வகையில் இந்தப் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளமை சிவில் சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 46 ஆண்டுகளாகத் தற்காலிகச் சட்டமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாதத் தடைச்சட்டம், சிறுபான்மையினர், ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை இலக்குவைக்கப் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போதைய சட்டமூலமும் அதே ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுப்பதாக அமைகின்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தரவுகளின்படி, 2025 இல் 46 சம்பவங்களும், 2026 இன் முதலாம் காலாண்டில் 12 சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய சட்ட வரைவு சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முழுமையாகத் திருத்தியமைக்கப்படும் வரை அல்லது புதிய சட்டமூலம் தயாரிக்கப்படும் வரை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முல்லையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்! : உடனடித் தீர்வு தேவை என ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காட்டுயானைகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், காட்டுயானைகளின் இத்தகைய…

59 0 0
இலங்கை செய்திகள்

தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் அதிகரித்து செல்கிறது.

பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தோட்டங்களின் குத்தகையிலிருந்து தோட்ட குடியிருப்பு பிரதேசங்கள் விடுவிக்கப்படாவிட்டால் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என முன்னாள் மத்திய மாகாண சபை…

61 0 0
இலங்கை செய்திகள்

கந்தப்பளை மாணிக்க விநாயகர் ஆலய மண்டபத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

கந்தபளை மாணிக்க விநாயகர் ஆலய மண்டபத்தில் இன்று (07) பொதுமக்களின் நலன் கருதி இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டது. நுவரெலியா பிரதேச சபை மற்றும்…

37 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசாங்கத்தின் பௌத்த விரோத போக்கிற்கு எதிராக இரு வழக்குகள் தாக்கல் செய்யப்படும்.!

2,300 வருட கால ஹெல சாசன வரலாற்றில் மிகவும் இருண்ட நாளாக 2026 ஒக்டோபர் 06 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக தூய்மையான ஹெல உறுமய (பிவிதுரு ஹெல…

66 0 0