உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சம்மாந்துறையில் 21 பேருக்கு டெங்கு தொற்று உறுதி.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
84 பார்வைகள்

சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவில் இந்த ஆண்டு இதுவரை 21 டெங்கு நோயாளர்கள் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பருவமழை காலத்தை முன்னிட்டு மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இம்மாதம் முதல் இப்பகுதியில் பருவமழை ஆரம்பமாகவுள்ளதால் டெங்கு நோய்க்காரணிப் பரவல் பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, டெங்குப் பெருந்தொற்றிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்கள் அனைவரும் இப்போதிருந்தே தீவிர முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் பொதுமக்கள் வாரம் ஒருமுறை தமது வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் பரிசோதித்து, முழுமையாகச் சுத்தப்படுத்த வேண்டும், நீர் தேங்கும் இடங்களை அகற்றல், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய டயர்கள், தேங்காய்ச் சிரட்டைகள், உடைந்த பாத்திரங்கள் மற்றும் பயன்பாடற்ற கழிவுப் பொருட்களை உடனடியாகக் கண்டறிந்து அகற்ற வேண்டும். மழைக்காலம் தீவிரமடைவதற்கு முன்னரே வீடுகளின் கூரைகள், பீலிகள் மற்றும் நீர் தேங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள அனைத்து இடங்களையும் துப்புரவு செய்ய வேண்டும்.

“நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வோம் – டெங்குவைத் தடுப்போம்!” எனும் நோக்கில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே சம்மாந்துறைப் பிரதேசத்தை டெங்கு அச்சுறுத்தலிலிருந்து முழுமையாகப் பாதுகாக்க முடியும் என சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அநுர அரசாங்கத்தின் பௌத்த விரோத போக்கிற்கு எதிராக இரு வழக்குகள் தாக்கல் செய்யப்படும்.!

2,300 வருட கால ஹெல சாசன வரலாற்றில் மிகவும் இருண்ட நாளாக 2026 ஒக்டோபர் 06 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக தூய்மையான ஹெல உறுமய (பிவிதுரு ஹெல…

60 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் பாதுகாப்புக்கு உடன் உத்தரவாதம் அளியுங்கள் : சபையில் சாணக்கியன் வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்குச் சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து அரசு உடனடியாக விரைந்து செயற்பட வேண்டும்…

58 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பு.!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பும் கலந்துரையாடலொன்றும் இன்று (07) நாடாளுமன்றத்தில்…

73 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை.!

அரசால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு’ கடந்த கால மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்த பல்வேறு கூறுகளைத் தன்னுள் கொண்டுள்ளது என்று…

60 0 0