உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு; அவசர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
54 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதற்குரிய நிரந்தரத் தீர்வை உடனடியாக வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அண்மித்த பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த காட்டு யானையொன்று, அங்குள்ள செல்வா மைதானத்தின் வேலிகளை முற்றாக அடித்து சேதப்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி பாரிய போராட்டத்திற்கு மத்தியிலேயே யானையைக் காட்டுப் பகுதிக்கு விரட்டியடித்துள்ளனர்.

கிராம மக்களால் விரட்டப்பட்ட குறித்த காட்டு யானை, நற்பிட்டிமுனை கிட்டங்கி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் அதிகாலை வேளையில் வீதியைக் கடக்க முயன்றுள்ளது. இதன்போது நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்புப் பகுதியில் இருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கித் துவிச்சக்கர வண்டியில் தோட்டப் பணிக்காகச் சென்ற சிறுவன் மீது எதிர்பாராதவிதமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலில் காயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மற்றொரு காட்டு யானையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு எந்தவித அசம்பாவிதமும் இன்றிப் பாதுகாப்பாக மீண்டும் காட்டுப்பகுதிக்கு விரட்டியடித்துள்ளனர். மனித-யானை மோதலைத் தவிர்க்கும் வகையில் அதிகாரிகள் மேற்கொண்ட இத்துரித நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

அறுவடைப் பருவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வயல் நிலங்களில் எஞ்சியிருக்கும் வைக்கோலுக்குத் தீ வைக்கும் நடவடிக்கை அப்பகுதியில் அதிகரித்து வருகின்றது. இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அழிந்து மண் வளம் முற்றாகச் சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சூழலியலாளர்களும் விவசாய நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், புகையின் தாக்கம் மற்றும் காட்டுப் பகுதியில் ஏற்படும் உணவுத் தட்டுப்பாடு காரணமாகவே யானைகள் கிராமங்களை நோக்கிப் படை எடுப்பதாகவும், இதனால் மனித-யானை மோதல்கள் தீவிரமடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் இக்காட்டு யானைகளின் அச்சுறுத்தலினால் பொதுமக்களின் உயிர்களும் உடமைகளும் பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதால், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு யானை வேலிகளை அமைப்பதுடன் நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என கிராமவாசிகளும் விவசாயிகளும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

முக்கிய போ*தைப்பொருள் கடத்தல்காரர் கைது.!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர – தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்…

63 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

76 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

87 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

100 0 0