உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தொழிலாளர் தேசிய முன்னணியின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணிக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
52 பார்வைகள்

தொழிலாளர் தேசிய முன்னணியின் கௌரவ தலைவர் பழனி திகாம்பரம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, தொழிலாளர் தேசிய முன்னணியின் இளைஞர் அணி, மற்றும் மகளிர் அணிக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இளைஞர் அணியின் செயலாளராக, மஸ்கெலியா பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பரமசிவன் ராஜ்குமார் அவர்களும், இளைஞரணி பொருளாளராக ஆசிரி சந்தன அவர்களும், மகளிர் அணியின் செயலாளராக மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் ராமர் தவமலர் அவர்களும், மகளிர் அணியின் ஊடகப் பொறுப்பாளராக நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி வீரப்பன் மஞ்சுளா அவர்களும், பொருளாளராக மாரிமுத்து ஜெயலட்சுமி ஆகியோருக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்தோடு தொழிலாளர் தேசிய முன்னணியின் உதவி செயலாளராக பெர்னாண்டோ ஜெட்ரூட் அவர்களும், நோர்வூட் பிரதேச சபையின் பிரதான அமைப்பாளராக நோர்வூட் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் நடராஜ சிவகுமார் அவர்களும், மஸ்கெலியா பிரதேச சபையின் பிரதான அமைப்பாளராக மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் பாலகுமார் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டனர்.

நியமனம் வழங்கும் நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் கணபதி நகுலேஸ்வரன் அவர்களும், சங்கத்தின் பொதுசெயலாளர் பிலிப் அவர்களும், கட்சியின் பிரதிப் பொது செயலாளர் கமலதாசன் மற்றும் உப தலைவர்களான மெல்கம், தியாகராஜா, சந்திரகுமார தேவி மற்றும் உதவி செயலாளரான உஷா பிரசாந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சம்மாந்துறையில் 21 பேருக்கு டெங்கு தொற்று உறுதி.!

சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவில் இந்த ஆண்டு இதுவரை 21 டெங்கு நோயாளர்கள் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பருவமழை காலத்தை முன்னிட்டு மக்கள்…

76 0 0
இலங்கை செய்திகள்

தேரருக்கு வெள்ளையாடை அணிவித்து வீதியில் அழைத்து வந்த செயல் அரசியல் நாடகம்.!

வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது காவி ஆடையின்றி சாதாரண கைதிகளுக்கான ஆடையில் அழைத்து வரப்பட்டமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது…

45 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் டயஸ்போராவை திருப்திப்படுத்த அரசு முனைகிறது.!

தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தை சீரழிக்கும் வகையிலும், இனவாதிகளையும் தமிழ் டயஸ்போராவையும் திருப்திப்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார். பத்தரமுல்ல…

44 0 0
இலங்கை செய்திகள்

யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு; அவசர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…

42 0 0