உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தண்டனைக் காலம் 3 ஆண்டுகளுக்கும் அதிகம் எனின் சிறை ஆடை கட்டாயம்.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
79 பார்வைகள்

சிறைச்சாலை விதிமுறைகளின்படி, 3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையை அணிந்தே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதன்ன தெரிவித்தார்.

சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிவரும் பல்வேறு கருத்துக்களுக்குத் தெளிவுபடுத்தல் வழங்கி அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிகமாக விளக்கமளித்த அவர்,
“பௌத்த பிக்கு ஒருவருக்கு நீதிமன்றத்தால் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அந்தத் தண்டனைக் காலத்தைச் சிறைச்சாலையில் கழிக்கும் போது அவர் தமது காவி ஆடையை அணிய முடியும்.

எனினும், விதிக்கப்பட்டது கடூழியச் சிறைத்தண்டனை என்றால் எந்தவொரு நபரும் சிறை ஆடையையே அணிய வேண்டும்.

தண்டனை பெற்ற ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவரது சிறைத்தண்டனைக் காலம் 3 ஆண்டுகளை விடக் குறைவானதாக இருந்தால், அவர் தண்டனைக்கு முன்னர் அணிந்திருந்த சாதாரண ஆடையை அணிவதற்குச் சிறைச்சாலை அத்தியட்சகர் அனுமதி வழங்க முடியும்.

அத்தகைய சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளுக்கும் காவி ஆடை அணிய அனுமதி வழங்கப்படலாம்.

ஆனால், 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு தராதரத்தைக் கொண்ட நபராக இருப்பினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது சிறைச்சாலையால் வழங்கப்படும் ஆடையை அணிந்தே ஆஜர்படுத்தப்பட வேண்டும்.

நாட்டின் சிறைச்சாலைகளில் 63 இற்கும் மேற்பட்ட தேரர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சிறைச்சாலையினுள் சிறை ஆடையையே அணிந்துள்ளனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாளுடன் சென்று ஊரவர்களை மிரட்டும் இளைஞர்கள்; பொலிஸார் பாராமுகம்.!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலிகோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் வாளுடன் சென்று அந்த ஊரவர்களை மிரட்டுகின்ற காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரவர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை…

46 0 0
இலங்கை செய்திகள்

உருத்திரபுரம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்.!

கடந்த முதலாம் திகதி உருத்திரபுரம் பகுதியில் சசிதரன் சமரழகி என்ற 17 வயதான யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். குறித்த யுவதி தன்னுடைய தற்கொலைக்கு காரணம்…

40 0 0
இலங்கை செய்திகள்

தொழிலாளர் தேசிய முன்னணியின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணிக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு.!

தொழிலாளர் தேசிய முன்னணியின் கௌரவ தலைவர் பழனி திகாம்பரம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, தொழிலாளர் தேசிய முன்னணியின் இளைஞர் அணி, மற்றும் மகளிர் அணிக்கான நியமனங்கள் வழங்கி…

46 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் தொடரும் திருட்டுச் சம்பவங்கள்; மக்கள் அச்சத்தில்.!

மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இந்த மாத தொடக்கத்தில் ஒரே நாளில்…

73 0 0