உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தடை செய்யப்பட்ட அமைப்புகளை மீளுருவாக்கம் செய்ய இடமளியோம்.!

இலங்கை செய்திகள் 20 மணி நேரம் முன்
65 பார்வைகள்

உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு எனவும், அதனை அரசு தடுக்கவில்லை எனவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், தடை செய்யப்பட்ட அமைப்புகளை மீளுருவாக்கம் செய்யும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின்போது, வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஆயுத மோதல்கள் நிலவிய காலப்பகுதியில் செயற்பாட்டில் இருந்த 7 துணை ஆயுதக் குழுக்கள் (தமிழ் ஈழ விடுதலை அமைப்பு, தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை அமைப்பு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை அமைப்பு, கருணா தரப்பு, ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பு) தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் குழுக்களிடமிருந்து இராணுவத்தால் மொத்தமாக 801 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஈ.பி.டி.பி. குழுவிடமிருந்து கைப்பற்றப்பட்டவற்றில் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்புடைய விசாரணைக்காக 30 ஆயுதங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களின் தலைவர்களும் பெரும்பான்மையான உறுப்பினர்களும் தற்போது செயற்பாட்டு அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்துள்ள நிலையில், இவர்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏதேனும் ஏற்படுகின்றதா என்பது குறித்துப் படைப்பிரிவுகளும் புலனாய்வுப் பிரிவுகளும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தடை செய்யப்பட்ட அமைப்புகளை மீளுருவாக்கம் செய்வதும், அது தொடர்பான விடயங்களை வெளிப்படுத்துவதும் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும். வடக்கில் திலீபனுக்குச் சிலை வைத்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0