சற்றுமுன் ஷிரந்தி ராஜபக்ஷ கைது.!
முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (7) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கிருலப்பனையில் உள்ள அவரது வீட்டில் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘சிரிலிய சவிய’ கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.