உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பில் சுவர் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயி@ரிழப்பு!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
69 பார்வைகள்

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டடச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார் என்று சந்திவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இந்தச் சம்பவச் இடம்பெற்றுள்ளது.

கிண்ணியடி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய சாமித்தம்பி குமாரசிங்கம் எனும் மேசன் தொழிலாளியே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்திவெளி பிரதான வீதியை அண்மித்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடு ஒன்றில், இரண்டு மேசன் தொழிலாளர்களும் கொங்கிறீட் கொட்டுவதற்காகச் சட்டிங் (பலகை) அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாகச் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாகச் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கிண்ணியடியைச் சேர்ந்த சாமித்தம்பி குமாரசிங்கம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சந்திவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி

மன்னார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) மாலை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சமூக சேவைகள் திணைக்களமும் மன்னார்…

48 0 0
இலங்கை செய்திகள்

சிறீதரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு அர்ச்சுனா வலியுறுத்தல்

பநாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

66 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (06) பாடசாலையில் இடம்பெற்றது. அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில்…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ். பல்கலையில் பட்டமளிப்பு விழா இன்று கோலாகலமாக ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் தலைமையில் வெகுகோலாகலமாக ஆரம்பமாகியது.…

64 0 0