உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ். பல்கலையில் பட்டமளிப்பு விழா இன்று கோலாகலமாக ஆரம்பம்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
62 பார்வைகள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் தலைமையில் வெகுகோலாகலமாக ஆரம்பமாகியது.

இந்தப் பட்டமளிப்பு வைபவம் நாளைமறுதினம் வியாழக்கிழமை வரையான மூன்று நாள்களும், ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பட்டம் பெற்ற பட்டதாரிகள், பல்கலைக்கழக அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், நூலகர், நிதியாளர் மற்றும் பதிவாளர் ஆகியோர் முதலில் அணிவகுத்துச் செல்ல, தவில் நாதஸ்வர மங்கள வாத்தியங்கள் முழங்க துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி, பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் ஆகியோர் கொடி, குடை, ஆலவட்டம் சகிதம் விழா மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

மண்டபத்தினுள்ளே, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பேரவை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல், துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோர் பட்டதாரிகளுக்கும், டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், பரிசில்கள், புலமைப்பரிசில்களை வழங்கியதோடு, சாதனை மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும் அணிவித்தனர்.

இம்முறை பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம், விவசாயபீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், தொழில்நுட்பப் பீடம், பொறியியல் பீடம், மருத்துவ பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில் நுட்பக் கற்கைகள் பீடம் ஆகிய 14 பீடங்களையும் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சுவர் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயி@ரிழப்பு!

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டடச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

63 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி

மன்னார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) மாலை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சமூக சேவைகள் திணைக்களமும் மன்னார்…

40 0 0
இலங்கை செய்திகள்

சிறீதரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு அர்ச்சுனா வலியுறுத்தல்

பநாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

60 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (06) பாடசாலையில் இடம்பெற்றது. அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில்…

60 0 0