உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தில் கௌரவிப்பு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
66 பார்வைகள்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பின்தங்கிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) இடம்பெற்றது.

திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். உதயகுமார் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தங்கவேலாயுதபுரம் பாடசாலைக்கு நேரில் சென்று, அப்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவித்தனர்.

இதன்போது, DDE திரு. A.M. Nowferdeen, DDE திரு. A. Nazeer, ADE திரு. S. Selvam மற்றும் ISA திரு. Paramasivam ஆகியோர் கலந்துகொண்டு, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

மேலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆசிரியர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானதும் சமூகத்திற்கு மிகவும் அவசியமானதுமான சேவை எனக் குறிப்பிட்டு, அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டி கௌரவித்தனர்.

பின்தங்கிய பிரதேசத்தில் கல்விப் பணியாற்றிவரும் ஆசிரியர்களை நேரடியாகச் சென்று வாழ்த்தி கௌரவித்த இந்நிகழ்வு, ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆசிரியர்களை கௌரவித்த திருக்கோவில் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மீளமைக்குமாறு கோரிக்கை.!

மத்திய மாகாண கண்டி மாவட்டத்தில் உள்ள ஹோப் தோட்ட வைத்தியசாலை, JEDB – ஹேவாஹெட்டையில் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மீளமைக்குமாறு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து…

50 0 0
இலங்கை செய்திகள்

கண்டாவளை கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மூன்றிற்கு நிதியுதவி!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர் கருனைநாதன்  இளங்குமரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கண்டாவளை கோட்ட பாடசாலைகள் மூன்றிற்கு பதினைந்து இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா நிதியில்…

40 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள் – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம்.!

தேசிய சிறுபான்மை இனம் என்ற வகையில் மலையகத் தமிழர்களை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையகத் தமிழ் மக்களை தேசிய நீரோட்டத்தில் அரவணைத்துச்…

64 0 0
இலங்கை செய்திகள்

நாட்டில் போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது! : பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை!!

இலங்கையில் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (06)…

76 0 0