பேனாவுக்குள் தங்கத்தை வைத்து கடத்த முயன்றவர் கைது.!
காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கத் தயாரான ‘சுபம்’ கப்பலில் பரபரப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் உடைமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, பேனா வடிவில் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கம்பி ஒன்றைக் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
தங்கத்தைக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் குறித்த நபரைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து, தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.