உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

11 இலட்சம் வழக்குகள் தேக்கம்; தெரிவுக்குழுவை நியமிக்கத் தாமதம் ஏன்?

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
69 பார்வைகள்

நீதிமன்றங்களில் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் காணப்படுவது குறித்து ஆராய்வதற்காகத் தாம் கோரிய தெரிவுக்குழுவைச் சபாநாயகர் இன்னும் நியமிக்காமல் இருப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“அரசமைப்பின் முதலாம் அத்தியாயத்தின் பிரகாரம் இறைமை மக்களுக்குரியது. ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமைகளை உள்ளடக்கிய மக்களின் இந்த உரிமைகள் சட்டவாக்கம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஊடாகவே பிரயோகிக்கப்படுகின்றன.

மக்களின் இறையாண்மையைப் பிரயோகிப்பதன் ஒரு பகுதியான நீதித்துறைச் செயற்பாடுகளில் 11 இலட்சம் வழக்குகள் குவிந்து காணப்படுவதாக நாம் எழுப்பிய கேள்விக்கு இதற்கு முன்னர் பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நீதித்துறைச் செயற்பாட்டின் செயற்றிறன், சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து ஆராயத் ‘தெரிவுக் குழு’ ஒன்று கோரப்பட்டுள்ளது.

இந்தத் தெரிவுக் குழுவைப் பெற்றுத் தருவது தொடர்பில் சபாநாயகரின் விருப்புரிமையைச் சவாலுக்குட்படுத்தப் போவதில்லை. எனினும், அரசமைப்பின் பிரகாரம் மக்களின் இறையாண்மையை மறுப்பதற்கான உரிமை சபாநாயகருக்குக் கிடையாது.

சபாநாயகராகத் தமக்குரிய விருப்புரிமைப்படி செயற்படச் சுதந்திரம் இருந்தாலும் அரசமைப்பை மீறுவதற்கான உரிமை யாருக்கும் இல்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மீளமைக்குமாறு கோரிக்கை.!

மத்திய மாகாண கண்டி மாவட்டத்தில் உள்ள ஹோப் தோட்ட வைத்தியசாலை, JEDB – ஹேவாஹெட்டையில் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மீளமைக்குமாறு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து…

44 0 0
இலங்கை செய்திகள்

கண்டாவளை கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மூன்றிற்கு நிதியுதவி!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர் கருனைநாதன்  இளங்குமரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கண்டாவளை கோட்ட பாடசாலைகள் மூன்றிற்கு பதினைந்து இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா நிதியில்…

33 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள் – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம்.!

தேசிய சிறுபான்மை இனம் என்ற வகையில் மலையகத் தமிழர்களை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையகத் தமிழ் மக்களை தேசிய நீரோட்டத்தில் அரவணைத்துச்…

60 0 0
இலங்கை செய்திகள்

நாட்டில் போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது! : பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை!!

இலங்கையில் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (06)…

72 0 0