கடற்றொழில் அமைச்சருக்கும், மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் உயர்மட்ட சந்திப்பு.!
மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருக்கும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் கேர்மன் குமார தலைமையிலான மீனவப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பு ஒன்று கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களின் பாதிப்புகள் தொடர்பாகவும், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், தொழில் முறையை ஒழுங்குபடுத்தக் கோரியும், அனர்த்த காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், மீன்பிடி சட்டம் மற்றும் மீன்பிடி கொள்கை தொடர்பாகவும் உரையாடப்பட்டதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.



