உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரிப்பு.!

58 பார்வைகள்

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா லவர்ஸ்லீப் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் மலையக கட்சிகளிடம் ஆட்சியதிகாரம் இருந்த காலத்தில் பெருந்தோட்ட கம்பனிகளின் அடாவடித்தனங்கள் குறைவாகவே காணப்பட்டது. அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்ற பொழுதும் அதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஆனால் இந்த அரசாங்கத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்திற்கு எதிராக பெருந்தோட்ட கம்பனிகளின், தோட்ட முகாமைத்துவங்களின், முதலாளிமார்களின் அடக்குமுறை அடாவடித்தனங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இதனை மலையக மக்களும் இளைஞர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 200 வருட காலமாக வாழ்ந்த மக்களுக்கு இன்னும் காணி உரிமை உறுதி செய்யாமல் இத்தகைய சம்பவங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. மலையக மக்கள் மீது அதிக அக்கறை உள்ளதாக காட்டிக் கொள்ளும் அரசாங்கம் இவ்வாறான சம்பவங்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு இனி இதுபோன்ற சம்பவங்கள் பெறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பு.!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பும் கலந்துரையாடலொன்றும் இன்று (07) நாடாளுமன்றத்தில்…

69 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை.!

அரசால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு’ கடந்த கால மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்த பல்வேறு கூறுகளைத் தன்னுள் கொண்டுள்ளது என்று…

55 0 0
இலங்கை செய்திகள்

சம்மாந்துறையில் 21 பேருக்கு டெங்கு தொற்று உறுதி.!

சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவில் இந்த ஆண்டு இதுவரை 21 டெங்கு நோயாளர்கள் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பருவமழை காலத்தை முன்னிட்டு மக்கள்…

81 0 0
இலங்கை செய்திகள்

தேரருக்கு வெள்ளையாடை அணிவித்து வீதியில் அழைத்து வந்த செயல் அரசியல் நாடகம்.!

வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது காவி ஆடையின்றி சாதாரண கைதிகளுக்கான ஆடையில் அழைத்து வரப்பட்டமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது…

49 0 0