உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
62 பார்வைகள்

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிரியானைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் நேற்று இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களிடமிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவருடன் கைது செய்யப்பட்ட மற்றைய நபரும் இந்தக் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம நீண்டகாலமாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைதைத் தொடர்ந்து, சந்தேகநபர்களிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மத்திய மலைநாட்டில் கனமழை.!

மத்திய மலைநாட்டில் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கனமழையுடனான காலநிலை நிலவுகிறது. மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய…

51 0 0
இலங்கை செய்திகள்

தென்மராட்சியில் சோகம்; கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம் – தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் உந்துருளியில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மீசாலை – புத்தூர்…

62 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரிப்பு.!

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நுவரெலியா லவர்ஸ்லீப் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,…

50 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

73 0 0