உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
151 பார்வைகள்

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.பி.எல். லக்சான் சமீர தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட எருமை மாடுகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் நேற்று (05) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்மாந்துறைப் பகுதியில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட 12 எருமை மாடுகளில் 7 மாடுகள் மருதமுனைப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த நபருக்கு சொந்தமான குறித்த 12 எருமை மாடுகளும் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி காணாமல் போயுள்ளதாகச் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டின் அடிப்படையில் சம்மாந்துறைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட எருமை மாடுகள் மருதமுனைப் பகுதியில் இருப்பதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், 7 எருமை மாடுகளை மீட்டதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மருதமுனைப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், இத்திருட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாகச் செயற்பட்ட சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாடுகளை மீட்கும் நடவடிக்கைகளுடன், கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடமும் சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையின் பேரிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

138 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

137 0 0