உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

ராசி பலன்கள் 2 மணி நேரம் முன்
63 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய தொடங்குங்கள். காரிய தடை விலகும். அதிக நேரம் கைபேசி பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேச மாட்டீர்கள். புது முடிவுகள் எடுக்கும்போது தடுமாற்றம் வரும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கையாளும்போது பொறுமை தேவை. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் போராட்டங்கள் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை தொடங்கும் போது கவனம் தேவை. யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். இளைஞர்கள் இன்று பொறுமையாக செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நேர்கானலுக்கு போகும்போது கூடுதல் கவனம் தேவை.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். எதிரி தொல்லை விலகும். மனப்பாரம் குறையும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். வருமானம் அதிகரிக்கும். புது உறவுகளின் வரவு மனதிற்கு அமைதியைத் தரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். தேவையில்லாத பகை விலகும். சொத்து சேர்க்கையும் உண்டு. நீண்ட தூர பயணங்களின் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தீபாவளி பர்ச்சேஸ் செல்ல வேண்டும் என்றால் கொஞ்சம் யோசனை செய்வது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் அகல கால் வைக்க வேண்டாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்லது நடக்கும். வருமானம் பெருகும். தேவையில்லாத வீண் விரைய செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். நீண்ட நாள் சொத்து பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை சுப செலவுகளை ஏற்படுத்தும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் நண்பர்களோடு மீண்டும் சந்திப்பதற்கு நல்ல நேரம் கைகூடி வரும். பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். முருகன் வழிபாடு கூடுதல் நல்ல பலன்களை கொடுக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். சென்ற இடமெல்லாம் மதிப்பும் மரியாதையும் கூடும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். மனப்பாரம் குறையும். தேவையில்லாத எதிரி தொல்லை நீங்கும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று இலாப நஷ்ட கணக்கு பார்த்து வேலை செய்வீர்கள். கவனமாக சிந்தித்து செயல்படுவீர்கள். கொஞ்சம் சுயநலம் வெளிப்படும். சின்னச் சின்ன எதிரி தொல்லைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்குள் பிரச்சினை வரலாம். முன்கோபம் வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் இன்று.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று யோகமான நாளாக இருக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நீண்ட தூர பயணங்களால் உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. உணவு பழக்கவழக்கத்தில் அலட்சியம் வேண்டாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 01.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். காரிய தடை விலகும். எப்போதுமே உங்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்த உயர் அதிகாரிகள், உங்களுக்கு ஆதரவு…

92 0 0