கிளிநொச்சி மாவட்டத்தில் உலக குடியிருப்பாளர் தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது
கிளிநொச்சி மாவட்டத்தில் உலக குடியிருப்பாளர் தினமான இன்று 05.10.2026 கிளிநொச்சி மாவட்டத்தில் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் நிதியுதவியின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளில், நிர்மாண வேலைகளை முடிவுறுத்திய 30 வீட்டுத்திட்ட பயனாளிகளிற்கு வீட்டுத்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் ,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன், க்ளீன் சிறீலங்கா மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வின் போது வீட்டு திட்டத்தினை பெற்ற வீட்டு உரிமையாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட வீட்டு உரிமையாளர்கள் கருத்தை தெரிவிக்கையில் பல வருட காலமாக நிரந்தர வீட்டு திட்டம் இன்றி வெயில் மழையிலும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக நிரந்தர வீடென்று பெற்று தந்தமைக்கு அரசாங்க தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் நன்றியை தெரிவித்தனர்


