புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.!
தலவாக்கலை ஹொலிரூட் தமிழ் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வு ஜனநாயக தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார, துணைப் பொதுச் செயலாளர் உமா கரந்தகொல்ல மூத்த துணைத் தலைவர் வி. ஜா. மு. தமித் லொகுபண்டார, நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் தொழிற்சங்கத் தலைவர் சிந்தாமணி மாரிமுத்து, கொத்மலை அமைப்பாளர் சண்முகநாதன் மனோகரன், நுவரெலியா அமைப்பாளர் ஹெலன் கிருஸ்டோபர் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
