உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை தலைமையக பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்பு.!

இலங்கை செய்திகள் 20 மணி நேரம் முன்
83 பார்வைகள்

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம் ஆண்டிற்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனை நிகழ்வும் கல்முனை உவெஸ்லி கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எல். லசந்த களுஆராச்சி தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆராச்சி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் நெறிப்படுத்தலில், அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் கௌரவ மரியாதையைச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.

நிகழ்வின் போது கல்முனை உவெஸ்லி கல்லூரியின் பாண்ட் வாத்தியக் குழுவினரின் இசை நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன், பங்கேற்ற மாணவச் செல்வங்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரால் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, காலை முதல் மாலை வரை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைப் பிரிவுகள், சுற்றாடல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட வசதிகள் மற்றும் அலுவலகப் பகுதிகளைச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அத்துடன், பொலிஸார் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களையும் பரிசோதித்ததுடன், உத்தியோகத்தர்களின் சுகாதார நடைமுறைகள் மற்றும் பொலிஸ் நிலையத்தில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறைகள் குறித்தும் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.

நிகழ்வின் இறுதி அங்கமாக, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட வழிகாட்டல் வகுப்பு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன், பொதுமக்கள் சேவையை மேலும் வினைத்திறனாக முன்னெடுப்பது தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0