உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு இனம், மதம் பாராமல் நீதி கிடைக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 18 மணி நேரம் முன்
85 பார்வைகள்

தீர்க்கப்படாத மனிதாபிமானப் பிரச்சினைகளைக் கையாள்வதில் பக்கச்சார்பற்ற, மனிதாபிமானமான, சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றும் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது முக்கியமானதாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

இலங்கையிலுள்ள செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் தலைவர் ஏஞ்சலிக் அப்பெய்ரூக்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மோதல்கள் முடிவுக்கு வந்த மாத்திரத்தில் அதன் மனிதாபிமானத் தாக்கங்கள் முடிவடைவதில்லை என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், அன்புக்குரியவர்கள் குறித்த தகவல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு இனம், மதம் அல்லது அரசியல் பின்னணி பாராமல் மரியாதை, கருணை மற்றும் நீதி கிடைக்க வேண்டும் என்றார்.

அத்தகைய தேவைகளுக்கு தொழில்முறையாகவும் பக்கச்சார்பின்றியும் பதிலளிக்கக் கூடிய நம்பகமான இலங்கை நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்துவதே இலக்காக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் கடந்த கால மோதல்கள் காரணமாகத் தொடரும் மனிதாபிமானப் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான தேசியத் திறன்களை வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.

பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், காணாமல்போன தமது அன்புக்குரியவர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை குறித்தும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு அண்மையில் வலியுறுத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமல்போனோரைக் கண்டறிவதற்காகச் சட்ட மருத்துவத் துறையின் திறன்களை வலுப்படுத்துவது, அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச நிபுணத்துவத்தைப் பெற்றுக்கொள்வது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. எனினும், நீண்ட காலத் தீர்வுகளுக்கு நாட்டின் தேசிய நிறுவனங்களின் பயனுள்ள செயற்பாடுகளும் திறன்களுமே வலுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

எஞ்சியுள்ள மனிதாபிமான சவால்களுக்குத் தீர்வுகளைக் காணவும், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கான மதிப்பை வலுப்படுத்தவும் நாடாளுமன்றம் மற்றும் தேசிய நிறுவனங்கள் ஆக்கபூர்வமாகப் பங்களிக்க வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0